அன்புள்ள அப்பா | Dear Father

அன்புள்ள அப்பா,

குழந்தையாக இருந்த நான், உங்கள் கைகளில் தூங்கினேன்,

உங்கள் முகத்தில் முத்தம் கொடுத்தான்,

உங்கள் பக்கத்தில் அழுதேன்.

நாள் இறுதியில் காடியில் நான் சோர்வு அடையும்போது,

நீங்கள்தான் என்னை தூக்கி வீட்டுக்குள் கொண்டு சென்றீர்கள்.

பள்ளி விடுமுறையில் என் சலிப்புக்கு மருந்தாக,

நீங்கள்தான் என்னுடன் சாலையின் பக்கத்தில் பூப்பந்து விளையாடினீர்கள்.

ஆனால், இன்று, இவ்வெல்லாம் அனுபவங்கள் என் மனதில் நினைவாகதான் ஆகிவிட்டன.

Dear father,

Being the child I was, I slept in your arms.

I gave you kisses on your face, I cried by your side.

At the end of the day when I got tired in the car, it was you who carried me into the house.

During school holidays, like a remedy to my boredom, it was you who played badminton with me by the road.

But today, all these experiences have merely become memories in my heart.

 

என் உடம்பு மாற ஆரம்பித்தபோது, நம் உறவும் மாற தொடங்கியது.

என்னால் உங்கள் கைய்களில் இனி தூண்க முடியாது,

பக்கத்தில் அழ முடியாது,

என் அன்பை எப்படி காட்ட தெரியாது.

வெளிநாட்டிற்கு செல்லும்போது ஒரே படுக்கையில் தூங்க கூடாது,

என் கையை நீங்கள் பிடிக்க கூடாது.

எனக்கு பிரச்சனை ஏற்படும்போது அம்மாவிடம்தான் பேசவேண்டும்,

என் சோர்வுக்கு உங்கள் மருந்து இனி முடிந்துவிட்டது.

ஏனென்றால், என் அப்பாவாக நீங்கள் இருந்தாலும்,

உங்கள் ஆண்மையும் என் பெண்மையும் கலக்க கூடாது.

When my body started changing, so did our relationship.

I can no longer sleep in your arms, or cry by your side.

I don’t know how to show you my love.

When we go overseas, we mustn’t share a bed, you musn’t hold my hand.

When problems happen to me, I must speak to mother.

Your remedy to my boredom has expired.

Because, even though you are my father,

Your masculinity and my femininity shouldn’t mix.

 

அன்புள்ள அப்பா,

நம் உறவில் இருந்த எல்லாவற்றுக்கும் தடை இருக்கும்போது,

என் அன்பை எப்படி உங்களிடம் காட்டுவது?

என் வாழ்க்கையிலும் என் மனதிலும்,

கட்டாயமாக நீங்கள் வங்கியைவிட பெரிதாக இருக்கிறீர்கள்,

ஆனால், அதை உங்களிடம் காட்டுவது,

ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொள்கிறான்.

திரும்பி உங்கள் முகத்தில் முத்தம் கொடுக்க,

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி கொண்டுவர,

நம் உறவை மீண்டும் தொடங்கவேண்டும்.

Dear father,

How do I express my love to you, when there are boundaries to everything in our relationship?

In my life and my heart, you are more than just my financial helper.

But to show this to you, I am learning every day.

To give you kisses on your face once again,

To bring happiness to your life once again,

We have to start our relationship once again.

 

அன்புள்ள அப்பா,

வீட்டிலிருந்தும் தூரமாக இருக்கும் நான்,

உங்களுடன் பேச, நட்பு கொள்ள முயற்சி செய்ய போகிறான்.

என் வெற்றிகளிலும் தோல்விகளிலும் நீங்கள் பகிர்ந்துகொள்ளுமாறு,

என் மனம் வேண்டுகிறது.

பல வருடங்களுக்க்கு என்னால் என் அன்பை காட்ட தெரியவில்லை,

ஆனால், மெதுவாக நம் உறவை மறுபடியும் வளரலாம்.

Dear father,

I, being so far away from home,

Will try to speak to you, and be your friend.

For you to be a part of my victories and failures,

Is what my heart desires.

For many years, I did not know how to show you my love,

But slowly we can grow our relationship once again.